செப்டம்பர், 16-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நான்கு துண்டுகளாக உடைந்திருந்தாலும் ஈபிஎஸ் தலைமையிலான அணி வலிமையாக உள்ளது. 95 சதவீத மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவருடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். மக்களவை தேர்தலை சந்திக்க அவர் தயாராகி விட்டார்.
தொகுதி பங்கீடு குறித்து பாஜக மேலிடத்துடன் பேச்சு நடந்த ஈபிஎஸ் அண்மையில் டெல்லி சென்றார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.அப்போது அதிமுக நிர்வாகிகள் யாரும் உடன் இல்லை. ஈபிஎஸ்சின் உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் மட்டுமே இருந்தார்கள்.
சம்பிரதாயமான உடல் நல விசாரிப்புகளுக்கு பிறகு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.எடுத்த எடுப்பிலேயே,11 பிளஸ் 4 இடங்கள் எங்களுக்கு தேவை’ என ஈபிஎஸ்சிடம் கறார் குரலில் தெரிவித்தார், அமித்ஷா.11 தொகுதிகள், பாஜகவுக்கு.நான்கு தொகுதிகள், பாஜகவுடன் ரத்தமும்,
சதையுமாக இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு.
பாஜக தலைமையுடன் நெருக்கமாக இருக்கும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களான பாரி வேந்தர், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்மும்
ஆகியோருக்கு நான்கு இடங்களை கேட்டுள்ளார், அமித்ஷா. அரைகுறை மனதுடன் அதற்கு ஒப்புகொண்ட ஈபிஎஸ், பாஜக போட்டியிடுவதற்கு அமித்ஷா கோரிய தொகுதிகளை கேட்டதும் ஆடிப்போனார். அதிமுக கோட்டையாக கருதப்படும், கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு,கோவை,நீலகிரி ஆகிய தொகுதிகளே அவை.
ஆனால் ஈபிஎஸ் சம்மதிக்கவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பதில் சொல்வதாக தெரிவித்துள்ளார்
தேர்தல் நெருங்குவதால், கூட்டனியை பாதிக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் பேச வேண்டாம்’’ என கோரிக்கை வைத்தார், ஈபிஎஸ்.அதனை ஏற்றுக்கொண்ட அமித்ஷா ’இனிமேல் தமிழக பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேச மாட்டார்கள்’ என உறுதி அளித்தார். தலைக்கு மேல் வழக்குகள்’எனும் கத்தி தொங்குவதால், பாஜக கேட்கும் இடங்களை அள்ளித்தர வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஈபிஎஸ் உள்ளதாக கட்சிக்காரர்கள்
புலம்புகின்றனர்.
000