ஜுலை- 24-
இந்தியாவில் இருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களில் மழை வெளுத்து வாங்கியதால் இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
இதனால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கான தடை அமெரிக்காவில் பெரும் பாதிப்பை உருவாக்கி உள்ளது.
’’இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து விட்டது, எனவே இனிமேல் அரிசி கிடைக்காது’’ என அமெரிக்காவில் காட்டுத்தீயாய் செய்தி பரவியது. பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாய் குவிந்த வண்ணம்.உள்ளனர். இதனால், அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது ஒரு ஆளுக்கு ஒரு பை அரிசி மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்றுமதி தடையை, சாக்காக வைத்துக்கொண்டு,இந்திய பலசரக்கு கடைக்காரர்களை போல்,, அமெரிக்காவிலும் பல கடைகள் அரிசி விலையை உயர்த்தி விட்டன.
அமெரிக்காவில் பெரும்பாலான மகாணங்களில் அரிசி விலை உயர்ந்தது. அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் முன்னர், அங்கு 1600 ரூபாய்க்கு விற்கப்பட்ட 10 கிலோ எடை கொண்ட அரிசி பையின் இப்போதைய விலை 2500 ரூபாய்.
ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான். சிலர் பாசுமதி அரிசியை வாங்கி சமைப்பதாகச் சொல்கிறார்கள். சாதரண சாப்பாட்டுக்கு அது பொருத்தமாக இல்லை என்று புலம்புகிறார்கள்.
இவர்களுக்கு விலை ஒரு பிரச்சினை இல்லை. தட்டுப்பாடு இல்லாமல் அரிசி கிடைத்தால் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது .
000