ஜனவரி-30.
அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் அருகே நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் மோதியதில் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி பெரும் சவாலாக உள்ளது.
கான்சியஸ் என்ற நகரத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக பயணிகள் விமானம் வாஷிங்டன் ரீகன் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு நடுவானத்தில் ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பொடொமாக் ஆற்றில் விழுந்தது.
மோதிய வேகத்தில் விமானமும் ஹெலிகாப்டரும் நடுவானத்தில் தீப்பிடித்து எரிந்த காட்சி வெளியாகி உள்ளது. இந்த விபத்து அந்த நாட்டு நேரப்படி இரவு 9 மணிக்கும் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணி அளவிலும் நடைபெற்று உள்ளது.
வாஷிங்டன் நகரத்தில் 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவுவதால் குளிர் கடுமையாக உள்ளது. இரவு நேரம் மற்றும் குளிர் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் பெரும் சவாலாக விளங்குகிறது.
,
விபத்துக்கு உள்ளான விமானத்தில் 60 பயணிகளும் நான்கு ஊழியர்களும் இருந்தனர். ஹெலிகாப்டரில மூன்று ராணுவ வீரர்கள் பயணம் செய்து உள்ளனர். அனைவருமே இறந்து விட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 உடல்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன.
*