மே.26
சென்னை, கரூர் உட்பட தமிழகம் முழுவதும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் வருமானவரித்துறையினர் இந்த சோதனையை நடத்திவருகின்றனர். இதில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களும் அடங்கும்.
அதன்படி சென்னை, கரூர் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடை 40 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலஜி சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழக அமைச்சர் வீட்டில் நடைபெறும் வருமானவரிச் சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.