”அரசியலில் அதிமுக ஆலமரம்… பாஜக வெறும் செடி…” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி

June 12, 23

அரசியலில் அதிமுக ஆலமரம், பாஜக வெறும் செடி என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 9 ஆண்டுகால அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பாஜக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நேற்று தமிழக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “தமிழ்நாட்டிலிருந்து இருவர் பிரதமராகும் வாய்ப்பை திமுக தடுத்து விட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் ஒரு தமிழரை பிரதமராக்குவதே தனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் ” தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வருவதற்கு தகுதியான நபர் எடப்பாடி பழனிசாமி தான். இந்திய, உலக அரசியலை தெரிந்தவர், விரல்நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக கூடிய தகுதி உள்ளவர்” என தெரிவித்தார்.

பொன்னையனின் கருத்தை வழிமொழியும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது.. ” தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வைத்தால் கூட அதிமுக 30 தொகுதிகளில் வெற்றி பெறும்; கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; சட்டமன்றத் தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற அதிமுகதான் காரணம். அண்ணாமலையின் இதுபோன்ற பேச்சுகள் தொடர்ந்தால் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்; அண்ணாமலை மீது ஜேபி நட்டா, அமித்ஷா ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஒரு ஆலமரம். ஆனால் பாஜக வெறும் செடிதான்.” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *