அரசு நிலத்தை அபகரித்த வழக்கு – அமைச்சர் பொன்முடி விடுவிப்பு.

போலி ஆவணங்கள் தயாரித்து அரசு நிலத்தை மாமியார் பெயரில் பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த, 1996 முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி நிலத்தை, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து  மாமியார் சரஸ்வதி பெயரில்,  பதிவு செய்ததார் என்பது புகாராகும்.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மாமியார் சரசுவதி, முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கிட்டு, சென்னை மாநகராட்சியின் தற்போதைய துணை மேயர் மகேஷ்குமர் உட்பட  10 பேர் மீது, 2003 ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்து உள்ளார்.

அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதராமில்லை. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் முழுமையாக நிரூபிக்கவில்லை. எனவே சந்தேகத்தின் பலனான குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த பொன்முடி மாமியார் சரஸ்வதி, அடையார் முன்னாள் சார் பதிவாளர் புருபாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் வழக்கு  விசாரணையின் போது உயிரிழந்து விட்டதால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்படுவதாகவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *