நடிகர் அரவிந்த்சாமியின் மகளுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இது , காதல் கல்யாணம்.
1991 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தளபதி’.ர்ஜினியுடன் முதன் முறையாக இணைந்த மணிரத்னம், இதனை ‘பான் இந்தியா’ படமாக எடுக்க திட்டமிட்டார். அனைத்து மொழி நடிகர்களையும் படத்தில் நடிக்க வைக்க ஆசை.
மலையாள ‘சூப்பர்ஸ்டார்’ மம்முட்டியை ஒப்பந்தம் செய்தார். இந்தியில் இருந்து அம்ரிஷ் புரி. தெலுங்கில் ஒரு மூத்த நடிகரிடம் பேச்சு நடந்தது. ஏனோ கை கூடவில்லை.
அந்த வேடத்தில் அரவிந்த்சாமியை நடிக்க வைத்தார், மணிரத்னம். கலெக்டர் வேடம். அப்போது அரவிந்த்சாமிக்கு 21 வயதுதான்.பின்னர் ரோஜாவில் அவரை கதாநாயகன் ஆக்கினார்.
அடுத்து வெளியான பம்பாய் திரைப்படம், அரவிந்த்சாமியை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றது.
அந்த நேரத்தில் ,இவர் குமரிகளின் ‘கனவு கண்ணன்’ஆனார்.
1994 ஆம் ஆண்டு காயத்ரி என்பவரை அரவிந்த்சாமி திருமணம் செய்தார். மண வாழ்க்கையில் கசப்பு. இருவரும் 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.
இரண்டு ஆண்டுகளில் அபர்ணா முகர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார், அரவிந்த்சாமி.
அரவிந்த்சாமி- காயத்ரி தம்பதிக்கு இரு குழந்தைகள் .ஆதிரா என்ற மகள். ருத்ரா என்ற மகன்.
28 வயதான ஆதிரா, சமையல் கலை நிபுணராக இருக்கிறார். அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த இவர், அந்த நாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார்.
இவர்கள் திருமணம் அண்மையில் சென்னையில் எளிமையாக நடைபெற்றது.
சினிமாக்காரர்களுக்கு அழைப்பு இல்லை. நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
—