அருண் விஜய் நடித்து வரும் ‘ரெட்ட தல’ படத்தில், அவருக்காக பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார்.
திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரெட்ட தல’. இதில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.
.தான்யா ரவிச்சந்திரன், சித்து இதனானி ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.
அவரது இசையில் அருண் விஜய்க்காக , தனுஷ் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இந்தப்பாடலை வெளிநாட்டில் படமாக்க உள்ளனர்.
தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தில் வில்லனாக அருண் விஜய் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
—