பாரதீய ஜனதா கட்சியின் மாநில தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவுக்கு மதுரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் மதுரை கொண்டு சென்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
சூர்யாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலிஸ் தரப்பு மனு மற்றும் சூர்யா தரப்பில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகியவை மீது மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் நீதிபதி டீலாபானு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சூர்யாவிற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், காவலில் எடுத்து விசாரணை நடத்த போலிசுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும் வாதிட்டார். இதே போன்ற வாதத்தை காவல் துறை தரப்பு வழக்கறிஞரும் முன் வைத்தார்.
சூர்யா தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோடு அவருக்கு உடனடியாக ஜாமீன் தரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டீலா பானு முடிவில் சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தார்.
000