ஏப்ரல் 16
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறும், 2 கோடி புதிய உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க இலக்கு வைத்து உழைக்க வேண்டும் என தீர்மானம், அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து தீர்மானம், எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் ஈபிஎஸ் அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் என குறிப்பிட்டு தீர்மானம், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தல் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.