60 வயதை தாண்டியுள்ள ராம்கோபால் வர்மா, இந்தியா முழுவதும் ஓரளவு சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர்.
நாகார்ஜுனாவை நாயகனாக வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இவர் இயக்கிய சிவா திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது.
பின்னர் இந்திக்கு சென்ற ராமகோபால் வர்மா, சிவா படத்தை ரீமேக் செய்தார். இதன் தொடர்ச்சியாக ரங்கீலா என்ற இந்திப்படத்தை தயாரித்து இயக்கினார்.ஊர்மிளா,அமீர்கான், ஜாக்கிஷெராப் இதில் நடித்திருந்தனர்.
வசூலை குவித்த இந்தப்படம்தான் ஏ.ஆர்.ரஹ்மான், நேரடியாக இசை அமைத்த முதல் இந்திப்படம்.ரங்கீலாவுக்கு பிறகே, ஊர்மிளா ஏறுமுகத்துக்கு சென்று, தமிழில் இந்தியன் படத்தில் வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.
சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என பல இந்திப்படங்களை கொடுத்த ராம்கோபால் வர்மா, சூர்யா நடித்த ரத்த சரித்ரா 2ம் பாகத்தையும் இயக்கி உள்ளார்
இப்போதெல்லாம் அவர் ஆபாச படங்களை அளித்து.பெயரை கெடுத்து கொண்டார்.
2018 ஆண்டு ‘காட் செக்ஸ் அண்ட் ட்ரூத்’ எனும் ஆபாச படத்தை இயக்கி திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அது போன்ற படங்களையே இயக்கி காசு பார்த்து வருகிறார் .
அண்மையில் அவர் ஒரு காரியம் செய்துள்ளார்.
என்ன ?
நிர்வாண நடிகைகளின் பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்தில் அமர்ந்தபடி எடுத்த போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“Their LIGHT made me DARK” என அதற்கு தலைப்பு கொடுத்து, தனக்குத்தானே அற்பமான விளம்பரம் தேடிக்கொண்டுள்ளார்..
அண்மையில் அமெரிக்கா சென்ற ராம்கோபால் வர்மா,அங்கு ஆபாச நட்சத்திரம் ஒருவருடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட போட்டோ, வைரலானது குறிப்பிடத்தக்கது..
000