சென்னையில் போக்குவரத்து நிறைந்த சந்திப்புகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிற்காமல் எளிதில் கடப்பதற்காக, “எம் சைரன்” எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது காவல்துறை.
இதன்படி குறிப்பிட்ட சாலை வழியாக ஆம்புலன்ஸ் வருகிறது என்ற தகவலை முன்கூட்டியே தெரிவிக்க போக்குவரத்து சந்திப்புகளில் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டர் மூலம் அது வருவது பற்றிய தகவல் , டிஜிட்டல் திரையில் தெரியும். இதனைக் கவனிக்கும் போக்குவரத்து காவலர், மற்ற வாகனங்களை ஒதுக்கி ஆம்புலன்ஸ் இடையூறின்றி செல்ல வழிவகை செய்திட முடியும்.
இந்த நவீன திட்டம் சென்னையில் முதற்கட்டமாக 25 தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்களில் பொருத்தப்பட்டு, 16 போக்குவரத்து சந்திப்புகளில் அமலுக்கு வந்துள்ளது. சேத்துப்பட்டில் ஈகா திரையரங்கு சந்திப்பில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார், விரைவில் 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் “எம் சைரன்” தொழில்நுட்பம் பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இனியாவது ஆம்புலன்ஸ் நிற்காமல் செல்ல வழி கிடைக்குமா?
000