ஏப்ரல் 16
ட்விட்டர் என்பது தரம் கெட்ட நபர்கள் செய்யும் விமர்சனங்களால் நிரம்பியுள்ளன. அவ்வாறு செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எஸ்.வி.சேகர் தரிசனம் மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் கூறுகையில், ”நேரடியாக அண்ணாமலை குறித்து எந்த கருத்தும் கூறவில்லை, தினம்தோறும் எனக்கு தோன்றும் விஷயங்களை, நகைச்சுவையாக ட்விட்டரில் பதிவு செய்து வருகிறேன். ஒருவரை புத்திசாலி என்று கூறுவதால், அடுத்தவர் முட்டாள் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. விஷயத்தில் உள்ளே சென்று, சூசகமாக கேள்வி கேட்டால் அதற்கு பதில் இல்லை நான் அது போன்று யோசிக்கவில்லை. நாம் போரிட வேண்டியது எதிராளியுடன் நமக்குள்ளே போரிட்டுக் கொள்வது பலவீனம் ஆக்கிவிடும்.
நான் பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர் குறிப்பாக நரேந்திர மோடி அவர்கள் வருகின்ற, தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பது எனது ஆசை . நான் கவுன்சிலர் பதவி வேண்டும் என்றோ, எம்எல்ஏ பதவி வேண்டுமென்றோ இந்த கட்சியில் பயணிக்கவில்லை. அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ட்விட்டர் என்பது தரம் கெட்ட நபர்கள் செய்யும் விமர்சனங்களால் நிரம்பியுள்ளன ,அவ்வாறு செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன் என கூறினார்.
ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் என்பது வரவேற்கத்தக்கது, இது அவசியமானது ஒன்று. உலகத்தில் சேவைக்கு சிறந்த அமைப்பு என்றால், ரெட் கிராஸ் என்று கூறுவீர்கள், ஆனால் அதைவிட பேரிடர் காலங்களிலோ , மிக முக்கிய நேரங்களில் ஆர்எஸ்எஸின் செயல்பாடு அதிகமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மையினருக்கு, என தனி அமைப்பு கூட உள்ளது. அவர்கள் எப்படி முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பார்கள். ஆர்.எஸ். எஸ் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது . அதனால் அரசியலில் இருப்பவர்கள் அதை பார்த்து பயப்படுகிறார்கள்.
பாரதி ஜனதா கட்சியில் நான் செயல்பட்டு வருகிறேன் நான் ஏதாவது கருத்து தெரிவித்து அதன் மூலம் பிரச்சனை ஏற்பட்டால் கட்சி என் பின்னால் வந்து நிற்காது என்ற சூழல் இருந்தால் நான் எப்படி பேச முடியும். குடும்ப பிரச்சனைக்காக நான் கட்சி வரவேண்டும் என கூறவில்லை ஆனால் கட்சி பாதுகாப்பு இருந்தால்தான் தொண்டன் கட்சிக்காக பேச முடியும்” என கேள்வி தெரிவித்தார்.