டிசம்பர்-19.
உலகத்தின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்கின் சொத்து மதிப்பு வெறும் ஆறு நாட்களில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உயர்ந்து உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் எட்டரை லட்சம் கோடி அதிகரித்து இருக்கிறது.
சமூக வலை தளமான எக்ஸ் (டுவிட்டர்), டெஸ்லா கார் கம்பெனி, வின்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்பக்கூடிய ஸ்பேஸ் எக்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் உரிமையாளரான மஸ்கின் சொத்து மதிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
கடந்த ஆறு நாட்களில் அவருடைய சொத்து மதிப்பு சுமார் நூறு பில்லியன் உயர்ந்து 500 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் எலன் மஸ்க் ஆதரித்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய நிறுவனங்களின் பங்குகள் விலை கூடியதே சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணமாகும்.
அமேசான் நிறுவனத்தி்ன் தலைவர் ஜெஃப் பெசோஸ் 248 பில்லியன். அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் உலகத்தின் இரண்டாவது பணக்காரராக விளங்குகிறார். அவரை போன்று எலன் மஸ்க் இரண்டு மடங்கு சொத்து மதிப்புடன் முதல் பணக்காரர் என்ற பெரும் பேரை பெற்று உலகத்தை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
*
.