ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்பியது தவறு என்று சிவகங்கை பள்ளியில் தனது நிதியில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்த பின் பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்
தமிழக சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது என்பது புது புரளி என்று செய்தியாளர்களிடம் கூறிய சிதம்பரம், இந்த புது புரளியை பாஜகதான் தூண்டிவிடுகின்றது என்ற சொன்னார். வதந்திகளை பரப்புவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்
பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பது என்பது வளர்ச்சி அல்ல அது வீக்கம் எனறு பேட்டியளித்த ப.சிதம்பரம், பாஜக தவறான பிரச்சாரங்களின் மூலம் தமிழகத்தில் வளர முயற்சிக்கின்றது என்றும் தெரிவித்தார்..