ஆளுநர் உரையை படிக்காமல் புறப்பட்டதற்கு ஆர்.என்.ரவி கூறும் விளக்கமும், குழப்பமும்.

ஜனவரி -06.

ஒவ்வொரு ஆண்டிலும் சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தில் உரையாற்ற வேண்டிய மரபை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நிறைவேற்றாமல் உடனே வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி சட்டப் பேரவையின் முதல் கூட்டம் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமானது. இதற்காக சட்டப்பேரவைக்கு வந்த ஆர்.என்.ரவி வழக்கமான மரபுகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார். முதல் நிகழ்ச்சியாக சட்டப் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

அதன் பிறகு தனது உரையை வாசிக்க வேண்டிய ஆளுநா் அந்த உரையை எடுத்துப் படிக்காமல சட்டப் பேரவையில் இருந்து திடீரென வெளியேறி விட்டார். அவரை ஏற்றிக் கொண்டு கார் ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றுவிட்டது.

அப்போது ஆளுநா் மாளிகையின் வலை தளத்தில் “சட்டப்பேரவை நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் பாடியவுடன் தேசிய கீதம் பாட வேண்டும் என்று முதல் அமைச்சர் மற்றும் சபாநாயகரிடம் ஆளுநர் வலியுறுத்தி இருந்தார். அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்ட்டது. இதனால் தேசீய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டு இருக்கிறது. தேசீய கீதத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது என்பது அரசின் கடமையாகும். அதனை பாட மறுத்தது வருத்தற்திற்கு உரியது”என்று அறிக்கை ஒன்று வெளியானது. கடந்த ஆண்டுகளிலும் இதே போன்று தேசிய கீதம் இசைக்கவில்லை என்று ஆளுநர் வெளியேறியது குறிப்பிடத் தக்கது.

ஆனால் என்ன ஆனதோ தெரியவில்லை வலை தளத்தில் வெளியிடப்பட்ட விளக்கத்தை சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகை நீக்கியது.
இதன் பிறகு சுமார் 15 நிமிடங்கள் கழி்த்து அந்த விளக்கத்தை மீண்டும் ஆளுநர் மாளிகை பதிவிட்டது. அதில் முந்தைய பதிவில் இடம் பெற்றிருந்த “நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் தொடங்கும் போதும் முடிவடையும் போது தேசீய கீதம் இசைக்கப்படும்” என்ற வாசகம் நீக்கப்பட்டு உள்ளது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சட்டப் பேரவையின் நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவதும் மரபு ஆகும். இந்த நடை முறை ஆளுநர் ரவிக்கு கடந்த ஆண்டுகளில் விளக்கப்பட்டும் இந்த ஆண்டும் அப்படி ஏன் நடந்து கொண்டார் என்று தெரியவில்லை.

சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு வருமாறு சபாநாயகர் அப்பாவு சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகைக்குச் சென்று ரவியை சந்தித்து அழைப்பு விடுத்துவிட்டு வந்தார். அப்போதே ரவி இந்த ஆண்டாவது சட்டப் பேரவையின் தொடக்கத்தில தேசிய கீதம் இசைக்கப்படுமா என்பதை கேட்டுத் தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப முடிவு எடுத்திருக்கலாம். அப்படி எந்த விளக்கத்தையும் கேட்டுப் பெறாமல் சட்டப் பேரவைக்கு வந்துவிட்டு ரவி வெளியேறியது அவர் வேண்டும் என்றே சர்ச்சைகளை உருவாக்குவதாக விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

ஆளுநா் படிக்காமல் விட்டுச் சென்ற உரையின் தமிழாக்கத்தை சபாநாயகா் சட்டப் பேரவையில் படித்தார்.
இதன் பிறகு சட்டப் பேரவையில் அமைச்சர் துரைமுருகன், ஆளுநரின் செயலை விமா்சிக்கும் விதமாக நீண்ட அறிக்கை ஒன்றை படித்தார்.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *