ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக நடத்திய மெகா பேரணி – ஈபிஎஸ் உள்ளிட்ட 5,500பேர் மீது 3பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்குப்பதிவு..!

மே.23

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்ட 5500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு சீர்கேடு, மின்வெட்டு, கள்ளச்சாராய மரணங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்பின், அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு அதிமுகவினர் சென்றனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து திமுக அரசு மீதான புகார் மனுவை அளித்தனர். இந்த பேரணியில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், ஒ.எஸ்.மணியன், பா.வளர்மதி, கோகுல் இந்திரா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். ஆளுநர் மாளிகைக்கு நோக்கிய அதிமுகவினரின் பேரணியால், கிண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற அதிமுகவினர் 5500 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்த்தல் உள்பட 3 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *