தமிழ்நாடு ஆளுநருக்கு சேலத்தில் கருப்பு கொடி காட்ட முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது. 300 பேர் போலிசார் கைது செய்யப்பட்டனர் .
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என். ரவி கலந்து கொள்ள கார் மூலம் கோவையில் இருந்து சேலம் வந்தார் .
அப்போது, அவருக்கு சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள அரசு பொறியியற் கல்லூரி அருகே பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி காட்டினர்.
அவர்கள் ஆளுநரை திரும்பிப் போகுமாறு வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவர்கள் கருப்பு உடை அணிந்து வரக்கூடாது என்பதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார் 300 பேரை கைது செய்தனர் .
அவர்கள் அனைவரும் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்ற நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொள்ளவில்ல. அவர் சென்னையில் முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருந்தார்.
000