நடிகர் விக்ரம் ஆரம்பகாலத்தில் ஸ்ரீதர் போன்ற பிரபல இயக்குநர்கள்  படங்களில் நடித்திருந்தாலும்  அவரை அடையாளம் காட்டியது பாலாவின் சேது படம்தான்

அதன்பிறகே மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் விக்ரமை தேடி வந்தனர்.படத்துக்குப் படம் நடிப்பில் மட்டுமில்லாது, உடம்பை வருத்தி நடித்து வருவதில் விக்ரம், இன்னொரு கமல்ஹாசன். அந்நியன், ஐ, கந்தசாமி, பொன்னியின் செல்வன் படங்கள் ஆகச்சிறந்த உதாரணங்கள்.

இப்போது விக்ரம் , பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். பசுபதி, மாளவிகா மோகனன்,பார்வதி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். தங்கசுரங்கம் உள்ள கோலாரில் தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகளை -உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகிறது.

ஜடாமுடி, நீண்ட தாடி என பழங்குடியின இளைஞரை ஞாபகம் படுத்தும் வகையில் விக்ரம் தோற்றம் உள்ளது. இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும். தங்கலான் குறித்து அதனை தயாரிக்கும் ஞானவேல் ராஜா , முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

‘’ தங்கலான் படத்தை உலகத்தரம் வாய்ந்த படமாக உருவாக்கி வருகிறோம்.விக்ரம் உள்ளிட்ட  அனைத்து நடிகர்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த படத்தை ஆஸ்கருக்கு எடுத்து செல்லும்  ஏற்பாடுகளை செய்து வருகிறோம்’ என்கிறார், ஞானவேல் ராஜா.

மகிழ்ச்சியாக இருக்கிறது !

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *