சென்னையில் கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வட மாநில இளைஞர்கள் இருவர் உயிரிழந்து விட்டனர். சினிமாக் காட்சி போன்று இந்த விபத்து நிகழந்து உள்ளது. அதி வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் மோதிக் கொண்ட போது இடி இடிப்பது போன்ற சத்தம் கேட்டது.
அப்போது தூக்கி வீசப்பட்ட நபர்களில் ஒருவர் எதிரே வந்த கார் மோதி அங்கயே இறந்தார்.மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்தார்.
உயிரிழந்த இருவரும் வட மாநில இளைஞர்கள். அவர்கள் குறித்த விவரங்களை அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலிசார் சேகரித்து வருகின்றனர்.
இதனிடையே திருச்சி மாவட்டம் வையப்பட்டி அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பேர் இறந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் காரில் பயணம் செய்தவர்கள். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.