இடைத்தேர்தல் முடிவால் இந்தியா கூட்டணியில் உற்சாகம் …

செப்டம்பர்,09 –

ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ’இந்தியா’ கூட்டணி கூட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளது.

மே.வங்காள மாநிலத்தில் பாஜக வென்ற இடத்தில் ,இப்போது திரினாமூல் காங்கிரஸ் வாகை சூடியுள்ளது. உ.பி.யிலும் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. இதனால் ’இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

முடிவுகள் எப்படி?

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது.யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக இருக்கிறார். கோஷி தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.தாராசிங், பாஜகவில் இணைந்தார்.அவர் பதவியை ராஜினாமா செய்தார்,

இதனால் கோஷி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில்அவரே பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் தோற்றுப்போனார். சமாஜ்வாதி கட்சியின் சுதாகர் சிங், தாரா சிங்கை 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் துப்குரி தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ,மறைந்ததால், இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜகவிடம் இருந்து, அந்த தொகுதியை ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. பாஜக வேட்பாளரை விட சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் வெற்றி பெற்றார்.

கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவால் புதுப்பள்ளி தொகுதி காலியாக இருந்தது. அது, காங்கிரஸ் கோட்டை. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் அமோக வெற்றி பெற்றார். இவர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விட 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது தந்தையின் சாதனையை முறியடித்தார்.இங்கு பாஜகவும் களம்இறங்கியது.அந்த கட்சியின் வேட்பாளர் 6 ஆயிரம் ஓட்டுகள்வாங்கி டெபாசிட் இழந்து விட்டார்.

புதுப்பள்ளியில் வெற்றி பெற்றவரும், இரண்டாம் இடம் பிடித்தவரும் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள் என்பது, விநோதமான உண்மை.

திரிபுரா மாநிலம் ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்தது. இப்போது அந்த மாநிலம் பாஜக கோட்டையாக மாறி விட்டது என்பதை, இந்த இடைத்தேர்தல் மீண்டும் நிரூபித்துள்ளது. அங்கு போக்சாநகர், தான்பூர்,ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.தான்புர் தொகுதியை பாஜக தக்க வைத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.மரணம் அடைந்ததால் போக்சாநகருக்கு தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக வெற்றிக்கொடி நாட்டியுள்ளது 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர், சி.பி.எம். வேட்பாளரை.தோற்கடித்தார். இந்த தொகுதியை சி.பி.எம்.மிடம் இருந்து பாஜக கைப்பற்றியுள்ளது

உத்தரகண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பார்வதி தாஸ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பாசன்ட் குமாரை 2,400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது, ஏற்கனவே பாஜக வென்ற தொகுதி.

ஜார்கண்ட் மாநிலம் தும்ரி சட்டப்பேரவைத் தொகுதியில் ‘இந்தியா’  வேட்பாளர் வென்றுள்ளார். பாஜக கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் ஜார்கண்ட் மாணவர் யூனியன் போட்டியிட்டது.கடந்த தேர்தலில் ஜே.எம்.எம். வெற்றி பெற்ற தொகுதி. அந்த கட்சி வேட்பாளர் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தொகுதியை தக்க வைத்துக்கொண்டார்.

ஆக மொத்தத்தில் ஏழு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்து உள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *