ஜனவரி-18,
ஜதராபாத்தில் ஒருவரிடம் இருந்து எடுக்கப்பட்ட இதயத்தை 13 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவ மனைக்கு 13 நிமிடங்களில் கொண்டு சென்று, மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்து உள்ள சாதனைக்கு பாராட்டுகள் குவிகின்றன.
எல்பி நகரில் உள்ள காமினேனி மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் இதயத்தை அவருடைய குடும்பத்தினர் தானமாக கொடுத்தனர். அந்த இதயம் அங்கிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு தேவைப்பட்டு உள்ளது.
சாலை வழியாக கொண்டு சென்றால் போக்குவரத்து நெரிசலில் அதிக நேரம பிடிக்கும் என்பதால் மருத்துவமனை நிர்வாகிகள் ஐதராபாத் மெட்ரோ ரயில் நிர்வாகத்தை நாடியுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்ட நிர்வாகிகள் சிறப்பு ரயில் ஒன்றை ஏற்பாடுச் செய்து உள்ளனர். மருத்துவர்களை இதயம் உள்ள பெட்டியுடன் மெட்ரோ ரயிலில் ஏற்றிக் கொண்டு இடையில் உள்ள 13 நிலையங்களிிலும் நிறுத்தாமல் குளோபல் மருத்துவமனை அருகில் உள்ள ரயில் நிலையத்தை 13 நிமிடங்களில் அடைந்து விட்டனர்.
உயிா் காக்கும் சேவையில் ஈடுபட்ட மெட்ரோ நிர்வாகத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
*