உலகின் முதன்முறையாக சுவீடன் அரசு செக்ஸை விளையாட்டாக அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்வீடன் அரசு, செக்ஸை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ‘ஐரோப்பா சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் போட்டியை நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த போட்டியானது வரும் ஜூன் 8-ம் தேதி தொடங்கி, 6 வாரங்கள் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டின் செக்ஸ் கூட்டமைப்பின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த போட்டியில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், 16 வெவ்வேறு பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். தம்பதியினரிடையே உள்ள கெமிஸ்ட்ரி, பாலினம் பற்றிய அறிவு, சகிப்புத்தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டு வெற்றியாளர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் 70 சதவீதம் வாக்குகளை பார்வையாளர்கள் அளிப்பார்கள் என்றும், நடுவர்கள் 30 சதவீதம் வாக்குகளை அளிப்பார்கள் என்றும் அதன் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுக்கு இப்போதே உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. குறிப்பாக, இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காகப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பிற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.