இந்திப்படத்தை காப்பி அடித்து உருவான ‘பிதாமகன்’ !

பாலு மகேந்திராவின் உதவியாளர்களில், அவரது பெயரை காப்பாற்றி வரும் பலரில் ஒருவர் பாலா.அவர் டைரக்டு செய்த முதல் படமான ‘சேது’ . நல்ல விமர்சனங்களை பெற்றதோடு ,பாக்ஸ் ஆபீசிலும் ஹிட். அடுத்து, அவர் எடுத்த படம்’நந்தா’.
தனது முதல் படத்தில் நடித்த விக்ரம், இரண்டாம் படத்தில் நடித்த சூர்யா ஆகிய இருவரையும் வைத்து பாலா இயக்கிய படம் ‘பிதாமகன்’.

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். சிம்ரன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

தமிழில் பெரும் வெற்ற பிதாமகன் திரைப்படம், சிவ புட்ரு என்ற பெயரில் தெலுங்கிலும், ‘டப்’ செய்து வெளியிடப்பட்டது.
பிதாமகன் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்தாலும், இன்றும் ரசிகர்கள் விருப்பக்கூடியு படமாக உள்ளது.
இந்தப்படம் ஒரு இந்திப்படத்தின் கருவை மூலமாக கொண்டு உருவானதாக இப்போது தெரிய வந்துள்ளது.அந்த இந்திப்படத்தின் பெயர் ‘சத்யா’.

1998 ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான சத்யாவின் கதையை , அனுராக் காஷ்யப் எழுதி தயாரித்திருந்தார்.
‘சத்யா’வின் கதை என்ன ?

வெளியூரில் இருந்து மும்பைக்கு வரும் ஒருவர் சில குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு ஒரு ரவுடியுடன் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது .இருவரும், ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகிறார்கள் -வெளியில் வந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.-
நெருங்கிய நண்பர்களாக பழகுகிறார்கள் -ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவர் கொல்லப்பட, மற்றொரு நண்பன் வில்லன்களை பழி வாங்குவார்.‘

இதுவே ‘சத்யா’ இந்திப்படத்தின் கதை.

இந்த கதையை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொன்டே, பிதாமகன் படத்தை உருவாக்கியதாக, இயக்குநர் பாலா பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

சேது, நந்தா படங்களின் கதைகளும், வேறு ஏதாவது படத்தில் இருந்து சுடப்பட்டதா ? என்பதை பாலாவே சொன்னால்தான் உண்டு.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *