‘இந்தியன் -3 ‘ரெடியாகி விட்டது!

ஜனவரி-05.
ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’, வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது .ராம் சரண், கியாரா அத்வானி ஜோடியாக நடித்துள்ளனர். நம்ம ஊர் எஸ்.ஜே.சூர்யா மெயின் வில்லன்.
படம் குறித்து பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், ரத்தின சுருக்கமாக பகிர்ந்துகொண்ட தகவல்கள் இது :
‘அரசு அதிகாரிக்கும் அரசியல்வாதிக்குமான மோதல்தான், கேம் சேஞ்சர் – அது ஏன் என்பதற்கு,நாயகன் கதாபாத்திரத்தில் வலிமையான பின்னணி உள்ளது – இவர்கள் மோதலுக்கு இடையில், அது எப்படி வளர்ந்து, எப்படி முடிந்தது என்பது சுவாரஸ்யமான கதை.
அரசியல்வாதி- அதிகாரி மோதல் என்பதால் இதுவும் லஞ்சம் பற்றி பேசுதா?ன்னு கேட்காதீங்க – இதுல வேற விஷயம் இருக்கு’என்றவர் , படத்தின் கதை உருவான கதையையும் சொல்கிறார்.
‘ கொரோனா காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள், சில ஹீரோக்களுக்காகக் கதை கேட்டாங்க – நான், இந்தியன் 2, இந்தியன் 3 பண்ணிட்டு இருக்கேன் – இது போதாதுன்னு ‘வேள்பாரி’ பண்ணலாம்னும் இருக்கேன் – என்கிட்ட இருக்கும் இன்னொரு கதைக்கு விஎஃப்எக்ஸ் முக்கியம் – அதுக்கு புதுமுகம் போதும்

இன்னொரு கதை ஸ்பை த்ரில்லர்- அது வெளிநாட்டுல எடுக்க வேண்டிய படம்- கொரோனா காலகட்டத்துல அது சாத்தியமில்லை- அதனால, வேற ஒருத்தர் கதையை பண்ணலாம்னு கார்த்திக் சுப்புராஜ்கிட்ட வாங்கி ஆரம்பிச்ச படம் இது ‘என்று சொன்ன ஷங்கரிடம் அடுத்த திட்டம் குறித்தும் கேட்கப்பட்டது.
‘அடுத்து வரப்போவது ,இந்தியன் -3’- ரெடியாக இருக்கு – இன்னும் சில காட்சிகள் மட்டும் ஷூட் பண்ண வேண்டியிருக்கு-. அடுத்து ‘வேள்பாரி’க்கும் ஸ்கிரிப்ட் ரெடி’என விடை கொடுத்தார், ‘ஜெண்டில் மேன்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *