செப்டம்பர்,02-
தனது சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்த் இருமுறை பெரும் சறுக்கல்களை சந்தித்தார். முதல் முறை ‘பாபா’படத்தின் போது.அவரே தயாரித்த பாபா படம் படுதோல்வி அடைந்தது.இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ரஜினிகாந்த் நஷ்டஈடு கொடுத்தார்.
‘ரஜினியின் ஆட்டம் குளோஸ்’என அப்போது கோடம்பாக்கத்தில் ஒரு கூட்டம் ஆர்ப்பரித்தது.இதனை தொடர்ந்து நடித்த சந்திரமுகி மிகப்பெரும் வெற்றி பெற்றது.அதன் வெற்றிவிழாவில் தான் தனது ஆதங்கத்தை கொட்டினார், ரஜினி.
‘’நான் யானை இல்லை.சறுக்கி விழுந்தா எந்திருக்காம இருக்க. நான் குதிரை. எடறி விழுந்த சடார்னு எந்திருச்சிவேன்’ என்று ஆவேசமானார்.
அண்ணாத்த படத்திலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.இதனால் அந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மீண்டும் கால்ஷீட் அளித்து ’ஜெயிலர்’படத்தில் நடித்துக்கொடுத்தார்.படம் பிரமாண்ட வெற்றி.இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ஹீரோ தொடங்கி இயக்குநர் வரை ஒவ்வொருவருக்கும் கார் பரிசளித்து வருகிறார்.
அண்மையில் ரஜினியை சந்தித்த கலாநிதி மாறன், காசோலை ஒன்றை வழங்கினார்.படம் வெற்றி பெற்றதால் வழங்கப்பட்ட
கூடுதல் சம்பளம் அது. அதன் தொகை குறித்து இப்போது தெரிய வந்துள்ளது. 100 கோடி ரூபாய்.ரஜினிக்கு ஜெயிலரில் நடிக்க ஏற்கனவே 110 கோடி ரூபாய் அளிக்கப்பட்டிருந்தது. இப்போதுகொடுக்கப்பட்ட அதிக சம்பளத்தை சேர்த்தால் ரஜினிஜெயிலரில் நடிப்பதற்காக வாங்கிய ஊதியம் 220 கோடி.
இந்தியாவில் இவ்வளவு சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ- ரஜினிகாந்த் தான். ஆம். இந்தியாவில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நாயகனாக உயர்ந்துள்ளார், சூப்பர்ஸ்டார்.
அடுத்த படம் வந்தா இன்னும் உயரத்துக்கு போவீங்களா?
இல்லை?
000