இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொற்று 5,000 ஐ கடந்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தொற்றுக்கு 25,587 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 2,826 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் குறைந்த தொற்று எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு பிறகு தற்போது தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையானது 5,000-ஐ தாண்டியுள்ளது.
இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளர்.
நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.