செப்படம்பர், 07-
பா.ஜ.க.வுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ எனும் பெயரில் வலிமையான கூட்டணியை உருவாக்கியுள்ளன. அண்மையில் மும்பையில் நடந்த ‘இந்தியா’ அணியின் ஆலோசனை கூட்டத்தில் ‘நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது’என முடிவு செய்யப்பட்டது.
ஆனால் சில மாநிலங்களில் ‘இந்தியா’வை எதிர்த்து ‘இந்தியா’யாவே போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் கேரள மாநிலத்தில் எலியும் பூனையுமாக உள்ளனர்.அங்கு இரு கட்சிகள் மட்டுமே வலிமையாக உள்ளன. பாஜகவுக்கு தளங்கள் இல்லை. கேரளாவில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் எதிர் எதிராகவேஇருப்பார்கள்.போட்டியிடுவார்கள்.இதனால் ‘இந்தியா’கூட்டணிக்கு பாதிப்பு இல்லை.
ஆனால் மே.வங்காள மாநிலத்தில் பாஜக பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.இந்தியா கூட்டணியில், மே.வங்காளத்தை ஆட்சி செய்யும் திரினாமூல் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது.ஆனால் அந்த மாநிலத்தில் ’தனித்து போட்டியிடுவோம்’ என கம்யூனிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.பஞ்சாப் மாநிலத்திலும் இது போன்ற களேபரம் ஆரம்பமாகி விட்டது.பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக உள்ளது.’இந்தியா’ கூட்டணியில் ஆம் ஆத்மியும் அங்கம் வகிக்கிறது. ஆனால் ’பஞ்சாபில் காங்கிரசுடன் கூட்டணிகிடையாது- மொத்தமுள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் ’’என. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்
திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
’’ கடந்த 2022 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்தே நின்றோம்.மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களை கைப்பற்றினோம்.டெல்லியில் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது.குஜராத்தில் தனித்து போட்டியிட்டு 13 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளோம்.பஞ்சாபிலும் மக்களவை தேர்தலில் தனித்தே நிற்போம்.ஜெயிப்போம்’ என கர்ஜிக்கிறார், பகவந்த் மான்.
பாஜகவை இவங்களே ஜெயிக்க வச்சுடுவாங்களோ?.
000