டிசம்பர்-18.
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் 537 விக்கெட்களை டெஸ்டிலும், 156 விக்கெட்களை ஒருநாள் போட்டியிலும், 72 விக்கெட்களை டி 20 போட்டிகளில் வீழ்த்தி உள்ளார்.
சென்னையை சேர்ந்த அஸ்வின் கடந்த 1986-ஆம் ஆண்டில் பிறந்தவர்.அவருக்கு வயது 38 ஆகும்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள அஸ்வின் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிகிறது.