ஏப்ரல்.25
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது.
பூமியின் வெவ்வேறு அடுக்குகள் அடிக்கடி சந்திக்கும் புவியியல் அமைவிடத்தால் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும். அந்த வகையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று இந்தோனேசியாவில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் நேற்று அதிகாலை 6.1 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.
அதன்பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையிலும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவானது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். சுனாமி எச்சரிக்கையையட்டி, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.