டிசம்பர்-29.
இந்தியாவில் இந்த 2024- ஆம் ஆண்டு வசூலை வாரிக்குவித்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்பர் ஒன் –புஷ்பா -2.
அல்லு அர்ஜுன் –ராஷ்மிகா நடித்து வெளியான தெலுங்குப்படம். தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்து திரையிட்டனர்.சுகுமார் இயக்கி இருந்தார். இதுவரை இந்த படம் ஆயிரத்து 705 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
பிரபாஸ் நடித்து பான் இந்தியா படமாக வெளியான ‘கல்கி 2898 ஏடி’ரூ. 1,200 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு இரண்டாமிடம்.
முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளவை, தெலுங்கு படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது இடத்தை பிடித்துள்ள படம் – ‘ஸ்திரி -2 ‘என்கிற இந்திப்படம். ரூ. 874 கோடி வசூல் செய்துள்ளது.
தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரூ. 521 கோடியுடன் நான்காம் இடத்திலும்,தமிழில் விஜய் நடித்த ‘ தி கோட்’ ரூ.440 கோடி வசூலித்து ஐந்தாம் இடத்திலும் உள்ளன
ஆறாம் இடம் ‘புல் புலையா -3’.
வசூல் ரூ. 417 கோடி.
கார்த்திக் ஆர்யன் –வித்யா பாலன் நடித்தது.
ஏழாம் இடம் – ‘சிங்கம் அகைன் ( ரூ. 389 கோடி )
எட்டாம் இடம் –‘அனுமன்’ ( ரூ.350 கோடி )
ஓன்பதாம் இடம் –பைட்டர் ( ரூ. 344 கோடி )
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை சித்தரித்த ‘அமரன் ‘ 340 கோடி ரூபாய் வசூலித்து 10 ஆம் இடத்தில் உள்ளது. சிவகார்த்திகேயன் ம் நாயகனாக நடித்திருந்தார்.
ஒரு கொசுறு தகவல்:
வசூல் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ‘புஷ்பா -2’ இன்னொரு வரலாற்று சாதனையையும் நிகழ்த்த உள்ளது.
அதிக வசூல் செய்த இந்தியப் படம் என்ற மாபெரும் சாதனையை ‘புஷ்பா 2’ படைக்கும் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை ‘டங்கல்’ படத்துக்கு இருந்தது,
ஆமிர்கான் நடிப்பில் வெளியான இந்தப்படம் 1950 கோடி ரூபாய் வசூல் செய்தது. அடுத்த இடத்தில் ‘பாகுபலி 2’ உள்ளது.
இந்தப்படம் 1810 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
இந்த இரண்டு சாதனைகளையும் ‘புஷ்பா 2’ முறியடிக்கும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள். தற்போதைய நிலவரப்படி 1700 கோடியை தாண்டியுள்ள புஷ்பா 2’,மேலும் பல மாநிலங்களில் வசூல் வேட்டை செய்து வருகிறது.
சில நாட்களில் புஷ்பா -2 , திரைப்படம் 2,000 கோடி ரூபாய் வசூல் செய்து ‘ரிகார்ட் பிரேக்’ செய்யும் படம் என்பது வர்த்தக நிபுணர்கள் கணிப்பு.
—