இனக்கலவரத்தின் போது எம்.ஜி.ஆர்.படங்களை நிறுத்திய இலங்கை அரசாங்கம் !
முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆர். சட்டசபையில் இலங்கை விவகாரம் குறித்து பேசினார்.அப்போது அவர் வெளியிட்ட தகவல் :
ஒரு வேடிக்கையான செய்தியை பத்திரிகைகளில் படித்தேன் –இலங்கையில் எனது படத்தை, -20 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த படத்தை காண்பிக்க கூடாது என்று அரசாங்கம் சொல்லி விட்டதாக அந்த செய்தி – ஆனால் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே ‘எனக்கு தெரியாது’என்று சொல்கிறார் –இதுதான் இலங்கையின் நிலைமை /
அங்கே யாருடைய கட்டுப்பாட்டில், யார் இயங்குகிறார்கள் என்று தெரியவில்லை – குற்றம் சொல்லும்போது, எப்படி நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேனோ, அதுபோல் ஜெயவர்த்தனேயைத்தான் குற்றம் சொல்ல முடியும்
இலங்கையில் முதலில் ஒரு கலகம் நடைபெற்றது .அது நடைபெற்று முடிந்த பிறகு – தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பிறகு, நான் இலங்கைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது ..என்னை அழைத்தவர்கள் ,அங்கு இருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள் .
5, 6 பத்திரிகைகளை வைத்துக்கொண்டிருப்பவர்கள் .அவர்கள் ,என்னை அழைத்து பட்டம் கொடுத்து, பாராட்டு விழா நடத்த இருந்தார்கள் .இதற்காக அண்ணாவிடம் அனுமதி கேட்டேன் .இப்படிப்பட்டவர்கள் என்னை அழைக்கிறார்களே, நான் போகலாமா ? என்று கேட்டேன். ‘இப்போதுதான் நீ போக வேண்டும்- நீ போய் நமது கொள்கைகளை சொல் –தமிழர்கள் யார் என்பதை சொல் ‘ என்று அண்ணா சொன்னார்’’என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.