ஆகஸ்டு,13-
யதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள்நெஞ்சங்களை தொட்டு, தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை எட்டியவர் நடிகர் விஜய் சேதுபதி.
’இமேஜ்’பார்க்காமல் வில்லன் வேடத்திலும்விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.ரஜினி, விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்த அவர் இந்திக்கும் சென்று விட்டார்.ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லன்.
விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கப்போவதாக சேரன் கூறியிருந்தார். இந்த புராஜெக்ட் தொடர்பாக இருவரும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது கதையின் ஒன் லைனைவிஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டார், சேரன்.
இந்த சந்திப்பு நடந்து 5 வருடம் கடந்துவிட்ட நிலையில் , விஜய் சேதுபதி படம் கை விடப்பட்டுள்ளதாக சேரன் தெரிவித்துள்ளார்..
‘அந்த படத்தை இயக்க முடியாது. அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.விஜய் சேதுபதி ரொம்பவும் உயர்ந்துவிட்டார். அவருக்காக கதை மாற்றப்பட வேண்டும். அது சாத்தியம் கிடையாது. ஒரே சமயத்தில் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார். கண்டிப்பாக இன்னும் 10 வருடங்களுக்கு அவரது கால்ஷீட் கிடைப்பது கஷ்டம். அதனால் அவரது படத்தை நான் இயக்குவதற்கான வாய்ப்பு இல்லை’’ என சோகத்துடன் சொன்னார் சேரன்.
சோகத்தை தொலைக்க ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடலை கேட்டுப்பாருங்கள், சேரன்.