ஜுலை, 06- இளையதளபதி விஜய்க்கு இன்னொரு உச்சத்தையும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சினிமாவில்புதுவாழ்வை தந்தவருமான லோகேஷ் கனகராஜ் கால்ஷீட்டுக்காக பெரிய நடிகர்கள் பலரும் காத்திருப்பது கோடம்பாக்கம் அறிந்த சங்கதி.
அவர் இப்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் சஞ்சய்தத், மன்சூரலிகான்,அர்ஜுன் ஆகியோருடன் இயக்குநர்கள் கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள்.
அக்டோபர் 19 ஆம் தேதி லியோ ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இந்திப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் நடிக்க உள்ளார்.இவருக்கும் வில்லன் வேடம்தான் என தெரிகிறது.அனுராக் ஏற்கனவே சில தமிழ் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் பேட்டி ஒன்றில்,’ லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் சின்ன கேரக்டரிலாவது நடிக்க வேண்டும்’ என அனுராக் காஷ்யப்கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
000