இன்னொரு பெண்ணுக்கு டார்ச்சர். ஓ.பி்.எஸ். மகன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படும் சூழல்.

ஆகஸ்டு,02-

ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்த மகனும்  தேனி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான ரவீந்திர நாத் எந்த நேரத்திலும் கைது செய்து விசாரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்படுவதை தவிர்க்க அவர் முன் ஜாமீன் கேட்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

ரவீந்திர நாத் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக பெண் ஒருவர்,சென்னை போலிஸ் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த புகாருதான் இதற்கு காரணம்.

செங்கற்பட்டு அடுத்து உள்ள ஏகாடூரில் வசிக்கும் காயத்ரி தேவி போலிசில் கொடுத்து உள்ள புகார் விவரம் வருமாறு..

குடும்பத்தோடு நான் செங்கற்பட்டில் வசித்து வருகிறேன்.கொடைக் கானலில் படிக்கும் போது உடன் படித்த நாகப்பிரிய எனக்கு நெருக்கமான தோழியாக இருந்தார். பள்ளிப் படிப்புக்குப் பிறகும் அவளும் நானும் நல்ல சினேகிதியாக இருந்தோம். அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வோம்.

கடந்த 2014- ஆம் ஆண்டு நாகப்பிரியாவின் தங்கை திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு ஓ.பன்னீர் செல்வம், மகள் கவிதா மற்றும் மகன் ரவீந்திர நாத், அவருடைய மனைவி ஆனந்தி ஆகியோர் வந்திருந்தனர். அப்போது அவர்களை எனக்கு நாகப்பிரியா அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு ஓபிஎஸ்சின் மகள் கவிதா, மருமகள் ஆனந்தி ஆகியோர் எனக்கு  நட்பானார்கள். ஆனந்தி மூலம் அவருடயை தோழி மலர் என்பவரும் என்னுடன் பழகினார்.

இதன் பிறகு மலருடன் ரவீந்திரநாத்துக்கு தொடர்பு ஏற்பட்டு விட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் ரவீந்திர நாத்தும் அவருடைய  மனைவி ஆனந்தியும் பிரிந்துவிட்டனர். ஆனாலும் ஒரே வீட்டில் வசித்துவந்தார்கள். இதன் பிறகு மலர் அவருடைய  கணவரை விவாகரத்து செய்துவிட்டு ரவீந்திர நாத்துடன் வாழ ஆரம்பித்தார்..

இதுபற்றி நான் ஆனந்தியிடம் கேட்டபோது, ரவீந்திர நாத் எம்.பி.யான பிறகு பெண் ஆசை கொண்டவராக மாறி விட்டார். அதனால் தான் அவர் என்னை விட்டு விட்டு என் தோழி மலருடன் குடித்தனம் நடத்துகிறார் என்று பதிலளித்தார்.

இந்த நிலையில் நான் சில பிரச்சினைகள் காரணமாக என் கணவரை கடந்த ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு பெற்றோருடன் வாழ ஆரம்பித்தேன். இதை அறிந்து கொண்ட ரவீந்திர நாத் அடிக்கடி என்னுடன் பேச ஆரம்பித்தார்.  அவரை நான் சகோதரராக கருதி பேசினேன். ஒரு நாள் அவருடைய நண்பர் என்ற அறிமுகத்தோடு முருகன் என்பவர் என்னுடன் பேசும்போது,”ரவீந்திரநாத் என் மீது ஆசைப்படுவதாகவும் என்னை அவர் ராணி போல பார்த்துக்கொள்வார்.ரவீந்திர நாத்துடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மறுத்தால் அவர் என்னையும் குடும்பத்தையும் அழித்துவிடுவார்” என்று மிரட்டினார்.

இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் ரவீந்திர நாத்தின் மனைவி ஆனந்திடம் இது பற்றி தெரிவித்தேன். அவர் கேட்டபோது ரவீந்திரநாத், தன் செல்போனை தவறாக யாரோ பயன்படு்த்தி யாராவது பேசி இருப்பார்கள் என்று சொல்லி சமாளித்து இருக்கிறார்.

இதன் பிறகு ரவீந்திர நாத் இரவு நேரங்களில் என்னுடன் அடிக்கடி பேச ஆரம்பித்தார். என்னை ரொம்ப பிடிக்கும். என்னோடு உறவு கொள்ள ஆசையாக இருக்கிறது. எங்கு ,எப்போது சந்திக்கலாம் என்று கேட்க ஆரம்பித்தார். அறுவருப்பான  முறையில் என் உடல் அமைப்பு பற்றி புகழந்து பேசினார். நான் உடன் படாவிட்டால் குடும்பத்தை அழித்து விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் எனக்கு பயமாக இருக்கிறது. ரவீந்திர நாத் மீது நடவடிக்கை எடுத்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு காயத்ரி தேவி புகாரில் தெரிவித்து உள்ளார்.

இது பற்றி போலிஸ் எப்.ஐ.ஆர்.பதிந்து ரவீந்திர நாத்தை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்பி வருகின்றனர். எனவே அவர் கைது செய்யப்படக்கூடும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

ஆனாலும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துச் செயல்பட்டு வரும் ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது சந்தேகம் என்ற செய்தியும் உலவுகிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தரப்பட்ட வழக்கில் ஒ.பி. ரவீந்திர நாத்தின் எம்.பி.பதவியை சென்னை  உயர் நீதிமன்றம் பறித்து உள்ளது. இதற்கு எதிராக அவர் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ள சூழலில் பாலியல் புகாருக்கும் ஆளாகி இருக்கிறார்.

வல்லவன் வகுத்ததுதான் நியாயம் !

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *