May 29, 2023
சிஎஸ்கே வீரர் “அம்பத்தி ராயுடு” இன்றைய போட்டியே, தன்னுடைய இறுதிப் போட்டி’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வோரு அணியும் மற்ற அணிகளுடன் முட்டி மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
இதையடுத்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற இருந்த இந்த போட்டி, மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மழை நின்ற பின் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடைபெறும் என தகவல் வெளியானது. மழை தொடர்ந்ததால் இறுதி போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து ரிசர்வ் டே விதிப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை அணிக்காக மிடில் ஆர்டர் வரிசையில் இறங்கி விளையாடிவரும் அம்பத்தி ராயுடு, ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ’இன்றைய போட்டியே, தன்னுடைய இறுதிப் போட்டி’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராயுடு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இதுதான் எனது கடைசி ஐபிஎல் தொடர். மும்பை மற்றும் சென்னை என்று 2 சிறந்த அணிகள், 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 பிளே ஆப்கள், 8 இறுதிப் போட்டிகள், 5 கோப்பைகள். இது ஒரு நல்ல பயணம். இன்று இரவு நடக்கும் இறுதிப் போட்டி ஐபிஎல்லில் எனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் உண்மையிலேயே இந்த சிறந்த போட்டியை விளையாடி மகிழ்ந்தேன். அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.