பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் அட்லீ. தனது குருவை போன்றே தொடர் வெற்றிகளை கொடுத்தவர்.
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி, பாலிவுட் சென்றார்.
ஷாரூக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை டைரக்ட் செய்தார். படம் ‘ பிளாக்பஸ்டர் ‘. அந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்தது.
அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு ‘பான் இந்தியா படத்தை இயக்க பேச்சுவார்த்தை் நடத்தினார் , அட்லீ. ஆனால் கை கூடவில்லை.
இதனை தொடர்ந்து ,தமிழில் தான் இயக்கி பெரும் வெற்றி பெற்ற ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்தார். அவர் டைரக்ட் செய்யவில்லை. ‘பேபி ஜான்’ என்ற இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.இதனால் சோர்ந்து போனார், அட்லீ.
இந்த நிலையில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை அட்லீ இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. படத்தின் பட்ஜெட் ரூ.500 கோடி என்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
பீரியட் படமான இதில் கவுரவ வேடத்தில், நடிக்க, ரஜினிகாந்திடம் ‘கால்ஷீட்’ கேட்டார், அட்லீ. அவர் எந்த பதிலும் சொல்லாத நிலையில் கமல்ஹாசனை அணுகினார்.அவரும் தயக்கம் காட்டியுள்ளார்.
இந்த சூழலில் சல்மான் கான் –அட்லீ படம் கை விடப்பட்டுள்ளதாக தகவல் .
அடி மேல் அடி வாங்கிய அதிர்ச்சியில், உறைந்து போய் நிற்கிறார், அட்லீ.
–