நடிகர் ரவி மோகன், இப்போது .தான் நடித்து கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு, இயக்குநராக களமிறங்க முடிவு செய்துள்ளார்..
படத்தொகுப்பாளர் மோகனின் இரண்டாவது மகன் ரவி. ஜெயம் எனும் படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இதனால் தனது பெயரை ‘ஜெயம் ரவி’ என மாற்றிக்கொண்டு படங்களில் நடித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இவர்கள் விவாகரத்துக்கு என்ன காரணம் என தெரியவில்லை. மனைவியை பிரிந்த ஜெயம் ரவி , உடனடியாக தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
தந்தை பெயரை தன்னோடு சேர்த்துக்கொண்டு மோகன் ரவி ஆகிவிட்டார். .
‘இனிமேல் நான் ஜெயம் ரவி அல்ல.. இனி ரவி மோகன் என அழைக்கவும் ‘என அண்மையில் குறிப்பிட்டார்.
‘பராசக்தி’,‘கராத்தே பாபு’ ஆகிய படங்களில் ரவி மோகன் பிசியாக இருக்கிறார்.
இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு, இயக்குநராக புதிய அவதாரம் எடுக்க முடிவு செய்திருக்கிறார் ரவி மோகன்.
படப்பிடிப்புக்கு இடையே திரைக்கதை எழுதும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். டைரக்ட் செய்வதோடு ,அவரே தயாரிக்கவும், முடிவு செய்துள்ளார்.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ள இந்தப்படத்தில் நாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளார்.