ஜுலை,21-
அவதுதூறு வழக்கில் விதிக்கப்பட்டு உள்ள இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், புர்னேஷ் மோடிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அவதூறு வழக்கில் குற்றவாளி என்று சூரத் நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக், கடந்த 8-ஆம் தேதி கூறிய தீர்ப்பில், அவதூறு வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டார். மேலும் “சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு எவ்விதத்திலும் அநீதியை இழக்கவில்லை, அது சட்டரீதியாக சரிதான். குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க எவ்வித முகாந்திரமும் இல்லை. இதன்படி ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்து இருந்தார்.
இதையடுத்து ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி,கே. மிஷ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் காலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி பி.ஆர்.கவாய், தனது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியுடன் உள்ள தொடர்பை குறிப்பிட்டு ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தாம் விசாரிப்பதில் ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா என்றும் கேட்டார்.
இதற்கு எதிர் தரப்பினர் ஆட்சேபனை இல்லை என தெரிவித்தனர். இதை அடுத்து நீதிபதிகள் இருவரும் அவதூறு வழக்கில் குற்றவாளி என்று சூரத் கோர்ட்டு அளித்த தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரும் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்குமாறு குஜராத் அரசுக்கும், புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்டனர்.பிறகு விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள்.
அன்று விரிவான விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
000