டிசம்பர்-19.
சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இரண்டுப பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840, இரண்டாவது பிரிவில் 600 என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
விபத்துக் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
*