ஓளிப்பதிவாளர்- இயக்குநர்- நடிகர்-
தயாரிப்பாளர்- வசனகர்த்தா என தமிழ்சினிமாவில் பல தளங்களில் பயணிப்பவர் தங்கர் பச்சான்.
அவரது மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’.சிவபிரகாஷ் இயக்கியுள்ள இதில் அவர் ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார்.இளையராஜா இசையமைத்துள்ளார்
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,’பாலுமகேந்திராவின் பாசறையில் இருந்து வந்திருக்கும் சிவப்பிரகாஷ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். அவரது முதல் படம் போலவே இல்லை
முதல் படத்திலேயே இயக்குநர் சிவபிரகாஷுக்கு இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இசைஞானி என்கிற வார்த்தை ரொம்பவும் குறைவு- இசை இறைவன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
40 ஆண்டுகளாக அவர் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கிறோம்- கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை. அவர் இசையைக் கேட்டால் சோறு தண்ணி எதுவுமே தேவையில்லை’ என்று சீமான் குறிப்பிட்டார்.
—