டிசம்பர்-31.
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்திய விஞ்ஞானிகளால் இரண்டு செயற்கைக் கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு பின்னர் நிலை நிறுத்தப்பட்டது இந்திய வான்வெளி சோதனையில் மிக முக்கிய சாதனையாக கருதுப்படுகிறது.
திங்களன்று இரவு பி.எஸ்.எல்.வி.சி. 60 என்ற ராக்கெட் மூலம் ஸ்பேடெக்ஸ்-பி, ஸ்பேடெக்ஸ் -ஏ என்ற இந்த இரண்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டன.
தரையில் இருந்து ஏவப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக் கோளும் 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக் கோளும் வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.
இந்த விண்கலகள் ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்டதாகும்.. தற்போது ஒன்றன் பின் ஒன்றாக சுற்றி வரும் வின்கலன்களை அடுத்த இரண்டு வாரங்களில் ஒன்றிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
எதிர்காலத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் போது அவர்கள் ஒரு விண்கலத்தில் இருந்த மற்றொரு விண்கலத்திற்கு மாறுவதற்கும் எரிபொருள் போன்றவற்றை மாற்றிக் கொள்வதற்கும் இந்த தொழில் நுட்பம் பயன்படும்
இந்த திட்டம் வெற்றிப் பெறும் போது விண் வெளியில் இந்தியாவும் ஆய்வு மையத்தை அமைக்க முடியும். மேலும் சுகன்யான், சந்திரயான்-4 திட்டங்கள் மற்றும் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவிகரமாகவும் இருக்கும். ஏற்கனவே சீனா, ரஷ்யா.அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த சாதனையை செய்து உள்ளன.
இரண்டு விண்கலன் களும் அனேகமாக ஜனவரி 7-ஆம் தேதி வாக்கில் இணைக்கப்படலாம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.
*