ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் துரத்திய இளைஞர்கள் – அலறிய பெண்கள்.

ஜனவரி-29.

சென்னை கானாத்தூரில் கிழக்கு கடற்கரைச் சாலையில் இரவு நேரத்தில் பெண்கள் சென்ற காரை திமுக கொடி கட்டிய காரில் சென்ற இளைஞர்கள் வழிமறித்து மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முட்டுக்காடு பாலம் அருகே சாலையின் நடுவில் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்த இளைஞர் ஒருவர், பெண்கள் பயணம் செய்த காரை தாக்கி உள்ளார். அப்போது காரில் இருந்த பெண்கள் பயத்தில் அலறி உள்ளனர்.

அவர்கள் வீடியோ ஆதாரத்துடன் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர்.

இளைஞர்கள் மிரட்டும்போது காரில் இருந்த பெண்கள் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது.

திமுக கொடி கட்டிய காரில் வந்தவர்கள் யார் என வீடியோ காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

சென்னை சிஆரில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்திச் சென்ற சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி என்பது லைசன்சா? என்றும் அவர் கேட்டு உள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை இ.சி.ஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் துரத்திய வீடியோவை பார்க்கும் போது நெஞ்சு பதறுகிறது என்று தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இ.சி.ஆர். சம்பவமும் ஓர் உதாரணம் என்று அவர் கூறியுள்ளார்.

இதே போன்று மற்ற கட்சித் தலைவர்களும் ஈசிஆர் சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் கடந்த மாதம் பலாத்காரம் செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன் நடந்துள்ள ஈசிஆர் நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது.
*

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *