ஜனவரி-07.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5- ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. அங்கு நடிகர் விஜயின் தவெக போட்டியிடுமா அல்லது ஒதுங்கிக் கொள்ளுமா என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
ஈரோடு கிழக்கில் ஜனவரி 10- ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிறது.
வேட்புமனுதாக்கல் தாக்கல் செய்வதற்கு ஜனவரி 17- ம் தேதி கடைசி நாள்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20-ம் தேதி வெளியாகும்
பிப்ரவரி 8- ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
அங்கு கடந்த 2021 சட்டசபை பொதுத் தேர்லின் போது திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அவர் திடீரென காலமானதால் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவருடைய தந்தை ஈவிகேஎஸ் இளங்கோாவன் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு சென்றார்.
கடந்த மாதம் இளங்கோவனும் காலமானதால் இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டு உள்ளது. இந்த முறை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்காமல் திமுக போட்யிட வேண்டும் என்று ஆளுங்கட்சி தரப்பு சொல்லிக்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தெரிவித்து உள்ளார்.
இருந்தாலும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை.
இன்னொரு கேள்வி புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் தமது தவெக சார்பில் வேட்பாளரை நிறுத்துவரா என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது.
திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் கடந்த 1972- ஆம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார். அவருடைய கட்சி முதல் வெற்றியை பதிவு செய்தது.
அதே போன்று நடிகர் விஜயும் ஈரோடு கிழக்கில் வேட்பாளரை நிறுத்தி தமது கட்சியின் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளார்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விஜய் ,வேட்பாளரை நிறுத்துவாரா அல்லது நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிக் கொள்வாரா அல்லது வேறு யாருக்கேனும் ஆதரவு கொடுப்பாரா என்பது தெரியவில்லை.
*