நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக மேகமூட்டம் மற்றும் மழை பெய்த நிலையில் வெப்பம் தணிந்து குளுகுளு காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சமவெளி பகுதிகளில் இம்முறை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் முதல் அவ்வப்போது விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடுங்குளிர் நிலவி வருவதால் சுற்றுலா பணிகள் மற்றும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள கேரட் முட்டைகோஸ் பீட்ரூட் போன்ற பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.