உதயநிதி ஸ்டாலின் ,வடிவேலு, ஃபகத் பாசில் ,கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாமன்னன்.
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் 700 திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள, இந்த படத்தை சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள்.
பொன்னியின்செல்வன் படத்தின் முதல்நாள் வசூலை, மாமன்னன் முதல்நாள் வசூல் தாண்டி விட்டதாக தகவல். இந்நிலையில், ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.” என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
000