பி.டி.ஆர்.ஆடியோ சர்ச்சை - விளக்கம்

உதயநிதி, சபரீசன் சொத்துக்குள் குறித்த ஆடியோ சர்ச்சை – நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் விளக்கம்

ஏப்ரல்.23

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் மற்றும சபரீசன் ஆகியோரின் சொத்துக்கள் குறித்து பேசியதாக வெளியான ஆடியோ, தொழில்நுட்ப உதவியுடன் இட்டுக்கட்டப்பட்டது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன், பேசியதாக 26 விநாடி ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. ‘உதயநிதி, சபரீசன் சொத்துகள் குறித்து பேசியதாக வெளியான அந்த ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆடியோ விவகாரம் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டர் பக்கத்தில் அவர் தமது விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘தான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆடியோ எளிதாக கிடைக்கும் நவீன தொழில்நுட்பம் மூலம் இட்டுக்கட்டப்பட்டது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இனிவரும் காலங்களில் ஆடியோ, வீடியோக்கள் வெளியாவதில் ஆச்சரியமில்லை. எந்த ஒரு ஜனநாயக நாட்டுக்கும் பேச்சு சுதந்திரம் மிகவும் அவசியம் என்று உறுதியாக நம்புவன் நான். எனக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான நான் ஒருபோதும் காவல்துறையில் வழக்குத் தொடர்ந்ததில்லை.

என்னுடைய மூதாதையர்கள் குறித்து தவறாக பேசியதற்காக மட்டும் ஒரே ஒருமுறை எதிர்கட்சி எம்.எல்.ஏ மீது வழக்குத் தொடர்ந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் என் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. சிறிய குற்றச்சாட்டுகள் முதல் பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுவருகின்றன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு நான் ஒருபோதும் எதிர்வினை ஆற்றியதில்லை. பொதுத்தளங்களில் கிடைக்கும் தொழில்நுட்பங்கள், அந்த ஆடியோ க்ளிப் நம்பகத்தன்மை கொண்டது அல்ல என்று தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ இட்டுக்கட்டப்பட்டது. தற்போது கிடைக்கும் எளிய தொழில்நுட்பத்தின் மூலம் இதுபோன்ற ஆடியோ, வீடியோ வெளியானால் ஆச்சர்யப்படுவதற்கில்லை’.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *