ஜூன்.3
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 192.3 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
2023ம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள பெரும் பணக்காரர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை கடந்த டிசம்பரில் முதல் முறையாக எல்விஎம்எச் நிறுவன அதிபர் பெர்னார்டு அர்னால்ட் பின்னுக்குத் தள்ளினார். இதைத் தொடர்ந்து, சீனாவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டதால், எல்விஎம்எச் பிராண்டு விற்பனை பெரும சரிவை சந்தித்தது.
இதனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்விஎம்எச் பங்கின் விலை 10 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதன்படி, அர்னால்டின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தது. இதனால், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு அர்னால்ட் தள்ளப்பட்டுள்ளார்.
அதேநேரத்தில், முதலிடத்துக்கு முன்னேறியுள்ள டிவிட்டர் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 55.3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது. அந்த வகையில், 192.3 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்திலும், அர்னால்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் 3வது இடம் இந்தியாவின் கவுதம்அதானியும், 5வது இடத்தில் பில்கேட்ஸும், 9வது இடத்தில் முகேஷ் அம்பானியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.