உலக பாரம்பரிய தினக் கொண்டாட்டம் : இன்று மாமல்லபுரம் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு குட்நியூஸ்…

ஏப்ரல்.18

உலக பாரம்பரிய தினத்தையொட்டி, இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி கண்டு ரசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் புராதன சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எவ்வித நுழைவு கட்டமணமின்றி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இதையொட்டி, மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களில் உள்ள நுழைவு கட்டண கவுன்டர்கள் இன்று மூடப்பட்டுள்ன. மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600-ம் உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம் நுழைவு கட்டணமாக தொல்லியல் துறை வசூலித்துவருவது குறிப்பிடத்க்கது. உலக பாரம்பரிய தினத்தையொட்டி வெளியாகியுள்ள மாமல்லபுரம் தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *