ஊடகங்களை ஒதுக்கிய ‘உலக நாயகன்’!


கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான திரைப்படம்’ அமரன்’.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் அமரன் படத்தை மாய்ந்து, மாய்ந்து எழுதி இருந்தன. அமரனை, மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்ததில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
‘அமரன்’. 100 நாட்களை கடந்து ஓடியுள்ளது. வசூலையும் குவித்தது.‘அமரன்’ படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

விழாவில், சிவகார்த்திகேயனை மிகவும் புகழ்ந்து பேசினார் கமல். ‘வீடு கட்டிய பணம் போக, மீதமுள்ள பணத்தை சினிமாவில் தான் முதலீடு செய்கிறார் சிவகார்த்திகேயன். இதன்மூலம் இவர் நம் அலைவரிசையில் உள்ள ஆள் என தெரிந்துக் கொண்டேன்” என்று குறிப்பிட்டார் உலக நாயகன்.

படக்குழுவினர், தயாரிப்பு நிறுவனம் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார், சிவகார்த்திகேயன். அவரது பேச்சின் சாராம்சம் இது:

‘இந்த படத்துக்கு எனக்கு சரியாக சம்பளம் வந்துவிட்டது . அது தமிழ் சினிமாவில் அரிது. எனக்கு இது ஆச்சரியம் . ஏனென்றால் படம் வெளியாவதற்கு 6 மாதத்திற்கு முன்பே முழுசம்பளத்தையும் கொடுத்து, அதை தாண்டி மரியாதையும் தெளிவாக கொடுத்தார்கள். இப்படியிருக்கும் ஒரு நிறுவனத்தைப் பார்ப்பது ரொம்பவே அரிது” என்று குறிப்பிட்டார், சிவகார்த்திகேயன்.
அமரன் நூறாவது நாள் விழாவுக்கு , ஊடகங்கள் யாரையும் தயாரிப்பாளர் கமல்ஹாசன் அழைக்கவில்லை. இதனால் அவர் மீது ஊடக ஆட்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *